பெண்கள் தங்கும் விடுதியில் ரகசிய கேமரா வைத்த உரிமையாளர் கைது

சென்னை:
பெண்கள் தங்கும் விடுதியில் ரகசிய கேமராக்கள் வைத்த உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஆதம்பாக்கத்தில் பெண்கள் தனியார் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இதன் உரிமையாளர் அங்குள்ள அறைகளில் சீரமைப்பு பணிகள் எனக்கூறி அடிக்கடி மாற்றம் செய்து வந்தார். இதனால், சந்தேகமடைந்த, அங்கு தங்கியிருந்த பெண்கள் அறையை சோதனை செய்து பார்த்துள்ளனர். அதில் விடுதியின் கழிவறை, படுக்கையறை உட்பட இடங்களில் கண்ணுக்கு தெரியாத சிறிய அளவிலான ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் ஆதம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். தொடர்ந்து அங்கு வந்த போலீசார், விடுதி அறையில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராக்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், 16 மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ததுடன் உரிமையாளர் சஞ்சீவையும் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!