பெண்ணைக் கொடூரமாகத் தாக்கியவர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்

இந்தியாவின் பெரம்பலூரில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில், அழகுக்கலை நிலையத்திற்கு சென்று பெண்ணைக் கொடூரமாகத் தாக்கிய தி.மு.கவின் முன்னாள் தலைவர் செல்வகுமாரின் CCTV காட்சி தற்போது இணையத்தளங்களில் வௌியாகி வைரலாக பரவி வருகின்றது.

சம்பவத்தில் தாக்கப்பட்ட சத்தியா என்ற 33 வயதான குறித்த பெண் அழகுக்கலை நிலையங்களை பெரம்பலூரில் நடாத்தி வருவதுடன், அதற்காக தி.மு.கவின் முன்னாள் தலைவர் செல்வகுமாரிடம் சுமார் 20 இலட்சம் ரூபா பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணத்தை அவர் மீள் செலுத்தாமையே இந்தச் சம்பவத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான பெண், பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, சி.சி.ரீ.வி. காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு வழக்கானது தொடரப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக தெரிவித்து அவர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக அடாவடியாக செயற்படுவதுடன் பெண்களிடம் வரம்பு மீறி நடந்து கொள்வது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தி.மு.கவின் சட்டவிதிகளின் படி தண்டிக்கப்படுவார் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது FACEBOOK பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!