பெண் ஒருவரை துப்பாக்கி சூட்டிலிருந்து காப்பாற்றிய நபர்

பெண் ஒருவரை அவரது முன்னாள் கணவர் துப்பாக்கியால் சுட முயன்றபோது, நபர் ஒருவர் அப்பெண்ணை காப்பாற்றியுள்ளார்.

இச்சம்பவம் புதன்கிழமை Nord மாவட்டத்தின் Lesquin எனும் சிறு பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் இயந்திர திருத்துனராக பணி புரியும் நபர் ஒருவர், வாகன தரிப்பிடத்தில் பெண் ஒருவரின் அலறல் குரல் கேட்டு, அங்கு சென்றுள்ளார். அங்கு பெண் ஒருவரை நபர் ஒருவர் துப்பாக்கி முனையில் பிடித்து வைத்துக்கொண்டு மிரட்டிக்கொண்டு இருந்துள்ளார். பின்னர் அப்பெண்ணின் கால்களை தட்டி விழுத்தி, அவரை இரு தடவைகள் தாக்கியுள்ளார். இதை பார்த்துக்கொண்டிருந்த இயந்திர திருத்துனர், பெண்ணை சுட முயன்ற நபர் மீது பாய்ந்து தாக்கியுள்ளார். குறித்த நபரை தாக்கி, கீழே விழுத்தி துப்பாக்கியையும் பறித்துள்ளார். அதன் பின்னர் காவல்துறையினருக்கு அழைத்துள்ளனர்.

விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், சில தகவல்களை வழங்கினார்கள். அதன்படி, துப்பாக்கியால் மிரட்டிய நபர் அப்பெண்ணின் முன்னாள் கணவர் எனவும், அவர் கைது செய்யப்பட்டதோடு Lille நகர நீதிமன்றத்துக்கு விசாரணைகளுக்காக அனுப்பிவைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர். அவர் மீது கொலை முயற்சி தாக்குதல் என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!