பெண் கமாண்டோக்கள்… கல்வீச்சு சம்பவத்தை தடுக்க விரைவில் களம் இறங்குகின்றனர்

ஸ்ரீநகர்:
பெண் கமாண்டோக்கள்… பெண் கமாண்டோக்கள்… விரைவில் களமிறக்கப்பட உள்ளனர்.

காஷ்மீரில் கல்வீச்சு சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது பெண்களும் அதிகளவில் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட துவங்கி உள்ளனர். இதை சமாளிக்க மத்திய ரிசர்வ் போலீஸ் படை, பெண் கமாண்டோக்களை தயார்படுத்தி வருகிறது.

இரவு நேரங்களிலும் கண்விழித்து சண்டை போடுவது, ஆயுதங்கள் பழுதானால் விரைந்து ஒரு நிமிடத்தில் அவற்றை சரி செய்வது போன்ற பயிற்சிகள் இவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்த பிறகு விரைவில் இவர்கள் களமிறக்கப்பட உள்ளனர்.

சமீபகாலமாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு கல்வீசுபவர்களை சமாளிப்பதும், கட்டுப்படுத்துவதும் மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது. இந்த கல்வீச்சுக்களில் பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் சிலர் உயிரிழந்துள்ளனர். இதனால் பெண் கமாண்டோக்களையும் களத்தில் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!