பெண் பிரதமர் வேட்பாளர்? யாராக இருந்தாலும் சரி! தேவகவுடா ஆதரவு

புதுடில்லி:
பெண் பிரதமர் வேட்பாளராக இருந்தாலும் சரிதான்… ஆதரவு கொடுப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?

வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு எதிராக மிகப் பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் காங்., தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பல கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பிறகு காங்., கூட்டணியில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இணைந்துள்ளது. லோக்சபா தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர உள்ளது. கூட்டணி முடிவானாலும் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து நிருபர்களிடம் முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடா பேசியதாவது:

முதலில் ராகுல் தான் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என காங்., சொன்னது. தற்போது மம்தா பானர்ஜி அல்லது மாயாவதியை தான் பிரதமர் வேட்பாளராக ஆதரிக்க காங்., முடிவு செய்துள்ளதாக பிடிஐ செய்தியாளர் என்னிடம் கேட்கிறார்.

பெண் ஒருவர் பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும் என காங்., விரும்புகிறது என்கிறார். பெண் ஒருவர் பிரதமர் வேட்பாளர் ஆவதில் எனக்கு எந்த பிரச்னையோ, ஆட்சேபனையோ இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!