பெரும் துயர் ஏற்படுத்திய மரணம்… சசிதரூர் வேதனை
புதுடில்லி:
பெரும் துயர்… பெரும் துயர்… சுனந்தா மரணம் எனக்கு பெரும் துயரை ஏற்படுத்தியது என்று மாஜி மத்திய அமைச்சர் சசிதரூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது;
சுனந்தா மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. என்னை நிலைகுலைய செய்தது. இது தொடர்பான செய்திகள் மீடியாக்களில் வெளியான போது எனது 80 வயதான தாயார் கண்ணீர் விட்டு அழுவதை பார்த்தேன். எனது நிலை தெளிவாக உள்ளது.
நான் எந்த தவறும் செய்யவில்லை. எனது மகன்களை கூட நான் அடித்தது கிடையாது. எனது வாழ்நாளில் போலீஸ் ஸ்டேசனுக்கோ கோர்ட்டிற்கோ செல்லக்கூடாது என சபதம் எடுத்திருந்தேன். ஆனால், அது நடந்து விட்டது. சுனந்தா மரண வழக்கில், டில்லி போலீசார் வேண்டுமேன்றே குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.
தனக்கு எதிராக நான் செயல்பட்டதாக எப்போதும் சுனந்தா கூறியது கிடையாது. இதனையே நான் கோர்ட்டில் கூறி வருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி- பத்மா மகன், திருச்சி