பேரதிர்ச்சி…136 பெரு நகரங்கள் கடலில் முழ்கப்போகிறது.

2050 ஆண்டுக்குள் உலகில் உள்ள 136 நகரங்கள் கடலில் மூழ்கிவிடும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதில் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா தான் முதலாவதாக இருக்கும் என்று அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளனர்.

புவியில் ஏற்படும் பருவநிலை மாற்றம், பூவி வெப்பமயமாதல் போன்றவற்றால் கடலோரப் பகுதிகள் நீரில் முழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.  ஏற்கெனவே அண்டார்டிக் பனிபாறைகள் வெகுவாக உருகி வருவதால் கடலின் நீர்மட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதுகுறித்து பாண்டுங் இன்டிஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற இந்தோனேசிய பல்கலைகழகம் ஆய்வு நடத்தி வருகிறது. அதன்படி, வரும் 2050ம் ஆண்டுக்குள் சுமார் 136 பெருநகரங்கள் கடலில் மூழ்கும் என தெரியவந்துள்ளது. இதில் இந்தோனேசியா தலைநகரமான ஜகார்த்தா முதலிடம் பிடித்துள்ளது. இந்நகரம் 13 நதிகளால் சூழப்பட்டு மிக அழகாக காட்சியளிக்கிறது. பருவமழையின் போது இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வாடிக்கையாகவே உள்ளது.  2013ல் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் ஜகார்த்தா பெரும் பாதிப்பை சந்தித்தது. இதில் பல கோடி மக்கள் இடம்பெயர்ந்து பிற நாடுகளுக்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் இந்த நகரம் தான் முதலில் மூழ்கும் என்ற ஆய்வுத் தகவல் இங்குள்ள மக்களை அதிர்ச்சியை செய்துள்ளது.

இங்கு சுமார் 10 லட்ச மீனவர்கள் வசிக்கின்றனர். மீன்பிடித் தொழிலே பிரதனாமானதாக உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு கடல் அலையின் வேகம் அதிகரித்து வருவதாக அங்குள்ள மீனவர்களும் தெரிவிக்கின்றனர்.

ஜகார்த்தா 2050க்குள் 95 சதவீதம் வரை கடலில் மூழ்கடிக்கப்படும். இதனால் 1 கோடி மக்கள் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு தெரிவிக்கின்றது. நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மையை அந்த நிலப்பரப்பு முழுவதும் இழந்ததே இப்படிக் கூறுவதற்கான காரணமாக உள்ளது.  இதனால் வெள்ள நீரை நிலத்தடிக்கு கொண்டு செல்லும் முயற்சியை அரசு எடுத்துவந்தது. ஆனால் இதற்கான செலவுகள் அதிகமானதால் இந்த முயற்சி கைவிடப்பட்டது. அதிகப்படியான நிலத்தடி நீரை உறிஞ்சும் நடவடிக்கைகளால் இந்த நிலைக்கு இந்நகரம் தள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நிலப்பரப்புக்கு அடியே வெற்றிடம் ஏற்பட்டு இத்தகைய அச்சுறுத்தல்களை ஜகார்த்தா சந்தித்து வருகிறது.

ஆண்டுக்கு 25 செ.மீ இதன் நிலப்பரப்பு பூமிக்குள் சென்றுகொண்டிருப்பது என்ற மற்றொரு ஆய்வு முடிவும் இங்குள்ள மக்களுக்கு மேலும் ஒரு பேரதிர்ச்சி.

Sharing is caring!