பேரழிவை தடுத்த பெண் விமானி – பரபரப்பு தகவல்கள்

மும்பை காட்கோபர் பகுதியில் நேற்று முமினம் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் மோதி விமானம் விபத்துக்கு உள்ளானது. இதில் விமானிகள் உள்பட 5 பேர் பலியான நிலையில், விமானத்தை இயக்கிய பெண் விமானியின் சாமர்த்தியம் காரணமாக பேரழிவு தவிர்க்கப்பட்டுள்ள பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

நேற்று முன்தினம் மதிய வேளையில், மும்பை ஜுகு விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 12 பேர் அமரக் கூடிய சிறிய ரக விமானம் மும்பை காட்கோபர் பகுதியில் கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடி கட்டிடத்தின் மாடியில் மோதி விபத்துக்குள்ளாகி தீ பிடித்து எரிந்தது. தற்போது அந்த விமான விபத்துக்கு குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.விபத்துக்குள்ளான 12 பேர் அமரக்கூடிய அந்த தனியார் சிறிய ரக விமானத்தை பெண் விமான இயக்கி வந்ததாக கூறப்படுகிறது. விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, அதை திறந்த வெளியை நோக்கி திருப்பிய தால், விமானம் ஒரு கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. இல்லையேல் விமான நிலையத்திலோ அல்லது நகரத்தின் மற்ற இடங்களிலோ விமானம் விழுந்து விபத்து ஏற்படுத்தி இருந்தால் மிகப்பெரிய சேதத்தையும், பேரழிவையும் ஏற்படுத்தி இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தை அப்போது இயங்கியது பெண் விமானி என்பதும், அவரது பெயர் கேப்டன் மரியா ஜுபேரி என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த விமானம் சோதனை ஓட்டத்தை முடித்துக்கொண்டு மும்பை ஜுகு விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது, விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, விமானத்தை பெண் விமானி, திறந்த வெளியை நோக்கி திரும்பி பெரும் விபத்தில் இருந்த தவிர்த்ததாக கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளான விமானம் கிங் ஏர் C90 ரக விமானம். சுமார் ஒன்பது ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் இயக்கப்பட்ட இந்த விமானம் முதல் பயணத்தின்போது விபத்துக்கு உள்ளானது. இதற்கு காரணமாக விமான இயந்திரத்தின் தோல்வி என சந்தேகிக்கப்படுகிறது.

இரட்டை என்ஜின்கள் உடைய அந்த சிறிய ரக விமானம் மதிய வேளையில் சுமார் 50 நிமிட பயண சோதனையை தொடர்ந்தே விபத்துக்குள்ளாதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த விமானத்தில் 2 விமானிகள் இருந்ததாக கூறப்படுகிறது.விபத்துக்குள்ளான விமானத்தில் கேப்டன் பிரதீப் ராஜ்புத் (விமானி) கேப்டன் மரியா ஜுபேரி (விமானி), விமான தொழில்நுட்ப வல்லுனர் சுரபி குப்தா, ஜுனியர் டெக்னிசியன் மணிஷ்பாண்டே, கோவிந்த துபே இவர்களுடன் அந்த கட்டிடத்தில் வேலை செய்துவந்த கூலித்தொழிலாளி ஒருவரும் மரணமடைந்துள்ளார்.

விமானம் கட்டித்தின் மாடியில் மோதி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து விமானத்தில் இருந்த பெட்ரோல் டேங்க் வெடித்துசிதறி தீ பிடித்து எரிந்தால் இந்த அளவுக்கு உயிர் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதேவேளையில் அதிர்ஷ்டவசமாக, விமான விபத்து ஏற்பட்ட நேரம் மதிய வேளை என்பதால், கட்டிட வேலை கள் நடைபெற்று வரும் அந்த கட்டிடத்தில் வேலை செய்துகொண்டிருந்த 35க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உணவுக்காக தரைதளம் சென்றுவிட்டதாகல் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்துகுறித்து முன்னாள் முன்னாள் விமானத்துறை மந்திரி பிரபுல் படேல், இரங்கல் டுவிட் செய்துள்ளார். அதில், “ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்படுவதை மனதில் வைத்து விமானத்தை இயக்கிய பெண் விமானியான இறந்த கேப்டன் மரியா சுபேரி, தனது சொந்த முயற்சியின் காரணமாக பல உயிர்களை காப்பாற்றி உள்ளார். அவருக்கு வணக்கம்.. இறந்த 5 பேருக்கும் என் ஆழ்ந்த இரங்கல். ” என தெரிவித்து உள்ளார்.

விமான விபத்து குறித்து, சிவில் ஏவியேஷன் அமைச்சர் சுரேஷ்பிரபு விசாரணைநடத்த சிவில் விமான போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டு உள்ளார்.

இந்த விமானம் ஏற்கனவே கடந்த 2009ம் ஆண்டு அலகாபாத்தில் விபத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து, விமானத்தை உபயோகப்படுத்தி வந்த உ.பி. மாநில அரசு, அதை யுஓய் ஏவியஷன் நிறுவனத்திடம் ஏற்கனவே விற்பனை செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!