பேஸ்புக் முடக்கம்
மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கட்சியின் பெயரில் இருந்த பேஸ்புக் பக்கங்கள் மற்றும் கணக்குகள் முடக்கப்பட்டன.தேர்தலில் பேஸ்புக் தலையடு இருக்கக்கூடாது என்பதற்காகவும், அரசியல் கட்சிகளின் போலி பக்கங்களை நீக்க உதவுவதாகவும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திடம் பேஸ்புக் தெரிவித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக ஹபீஸ் கட்சி செய்தி தொடர்பாளர் கூறுகையில், எங்கள் வேட்பாளர்களின் பேஸ்புக் பக்கங்கள் உரிய காரணம் இல்லாமல் முடக்கப்பட்டுள்ளன என்றார்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S