பொன். மாணிக்கவேல் மீது அறநிலையத்துறை அதிகாரிகள் புகார்

சென்னை:
சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் மீது புகார் கொடுத்துள்ளனர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் டிஜிபி ராஜேந்திரனிடம் புகார் அளித்தனர்.

பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:

60 ஆண்டுகளுக்கு முன்பும் சிலைகள் திருடப்பட்டுள்ளன. தற்போதும் திருடப்பட்டுள்ளன. 60 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்கும் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. எந்த விசாரணைக்கும் தயாராக உள்ளோம் என்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!