பொருட்களுக்கான VAT வரியை மீள செலுத்துவதற்கான நடைமுறை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கான VAT வரியை மீள செலுத்துவதற்கான நடைமுறை இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையை ஆசியாவின் வர்த்தக மத்திய நிலையமாக நிலைநிறுத்தும் முயற்சியின் ஒரு கட்டமாக சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட கருமபீடம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், நாட்டில் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கான 15 வீத VAT வரியை நாட்டில் இருந்து திரும்பிச்செல்லும் போது மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!