போதைப்பொருள் கடத்தல் குழுக்களின் ஊடுருவல் தகவல் கசிவு

மெக்ஸிக்கோவின் Acapulco பிராந்தியத்தின் அனைத்து பொலிஸாரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் குழுக்களின் ஊடுருவல் தொடர்பான தகவல் கசிந்துள்ள நிலையில், அனைத்துப் பொலிஸாரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், பிராந்திய பொலிஸாருக்குப் பதிலாக இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Acapulco பிராந்தியம் மெக்ஸிக்கோவில் மிகப்பிரபலமான மற்றும் செல்வந்த பிராந்தியமாக அடையாளம் காணப்பட்டாலும், போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் கொலைகள் அதிகளவில் இடம்பெறும் பகுதியாகவும் பதிவாகியுள்ளது.

மெக்ஸிக்கோவில் கடந்த வருடத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 103 பேர் என்ற அடிப்படையில் கொலைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மெக்ஸிக்கோவில் அதிக வன்முறைகள், குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் அதிகளவில் செயற்படும் பகுதியாகவும் Acapulco பிராந்தியம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

Sharing is caring!