போதையில் வாகனங்களுக்கு தீ வைப்பு…மர்ம நபருக்கு வலை

புதுடில்லி:
போதையில் வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

டில்லியின் மதன்கீர் பகுதியில் குடிபோதையில் வாகனங்களுக்கு தீவைத்து விட்டு ஒரு மர்ம நபர் தப்பி சென்று விட்டான். இந்த சம்பவத்தில், எட்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு கார்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. ஆறு மோட்டார் சைக்கிள்களும், இரண்டு கார்களும் சேதமடைந்தன.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!