போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு இன்று விசாரணைக்கு வருதாம்… வருதாம்!
புதுடில்லி:
போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
ராஜிவ் பிரதமராக இருந்து காங்., ஆட்சி நடந்த போது, சுவீடன் நாட்டின், போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து ராணுவத்துக்கு ரூ.1,437 கோடிக்கு பீரங்கிகள் வாங்க, ஒப்பந்தம் செய்ததில் ரூ.64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனை சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இதை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
2005 ல், டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி, ஆர்.எஸ்.சோதி, போபர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக, சி.பி.ஐ., பதிவு செய்த வழக்கை ரத்து செய்து இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த, பிரிட்டனில் வசிக்கும் தொழில் அதிபர்களான, இந்துஜா சகோதரர்கள் உள்ளிட்டோரையும், வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பு அளித்தார்.
தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய அனுமதி கோரி, மத்திய அரசுக்கு, சி.பி.ஐ., மீண்டும் கடிதம் எழுதியது. இதற்கு, மத்திய அரசு 2017-ல் அனுமதி வழங்கியது. 2017- பிப்ரவரியி்ல் சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் ரஞ்சன் கோகெய், கே.எம். ஜோசப் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.
இத்தகவலை நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நன்றி– பத்மா மகன், திருச்சி