போராட்டம் தொடரும்… இடைநிலை ஆசிரியர்கள் திட்டவட்டம்

சென்னை:
தொடரும்… தொடரும்… போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர் இடைநிலை ஆசிரியர்கள்.

சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும் என வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் சிலர் மயங்கியதை தொடர்ந்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, சங்கத்தினருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளித்தால், மட்டுமே போராட்டத்தை கைவிட முடியும் என மீண்டும் இடைநிலை ஆசிரியர்கள் கூறியுள்ளனர். மேலும் போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!