போரில் ஐ.எஸ். கிளர்ச்சியார்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்

சிரியாவில் இடம்பெற்று வருகின்ற போரில் ஐ.எஸ். கிளர்ச்சியார்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்ததையடுத்து, அமெரிக்க படைகளை மீளப்பெறுவதாக, ட்ரம்பின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வட கிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் சுமார் 2,000 அமெரிக்கப் படையினர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சிரியாவிலிருந்து அமெரிக்கப் படையினர் வெகுவிரைவில் வெளியேறுவர் என, இந்த ஆண்டின் தொடக்கத்திலே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தமை நினைவுகூரத்தக்கது

Sharing is caring!