போர்த்துக்கல் பகிஷ்கரிப்பு தொடர்பில் அரசு உத்தரவு

போர்த்துக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எரிபொருள் தாங்கி சாரதிகளை போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

போர்த்துக்கல்லில் நேற்றிலிருந்து எரிபொருள் தாங்கி சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சாரதிகள் கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்ததுடன், நேற்றுலிருந்து தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தமக்கு பணிபுரிவதற்கான சாதகமான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும், மற்றும் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள குறித்த காலப்பகுதயில் சாரதிகளின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!