போர் நிறுத்தத்தை அமுல்படுத்துமாறு அழைப்பு விடுப்பு

யேமனில் விரைவான போர் நிறுத்தத்தை அமுல்படுத்துமாறு, அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜிம் மெட்டிஸ் மற்றும் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ ஆகிய இருவரும் அழைப்பு விடுத்துள்ளனர்.

எதிர்வரும் 30 நாட்களுக்குள் வான் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அமெரிக்கா விரும்புவதாக ஜிம் மெட்டிஸ் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உதவும் ஐ.நா. தலைமையிலான பேச்சுவார்த்தை, அடுத்த மாதம் ஆரம்பமாகும் என மைக் பொம்பியோ பிறிதொரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

யேமனில் கடந்த சில வருடங்களாக இடம்பெற்று வருகின்ற உள்நாட்டுப் போரினால், அங்கு மனிதாபிமான பேரழிவு வளர்ந்து வருகின்றது.

Sharing is caring!