போலந்துக்கு அனுப்பப்படும் 1000 அமெரிக்க படையினர்

அமெரிக்கா மேலும் 1000 படையினரை போலந்துக்கு அனுப்பவுள்ளது.

போலந்து பிரதமர் அன்ட்ரஸெஜ் டுடாவுடன் (Andrzej Duda) இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மனியில் நிலைகொண்டுள்ள அமெரிக்காவின் 52000 படையினரை மீள அழைக்கவுள்ளதுடன், ட்ரோன் மற்றும் ஏனைய இராணுவ கட்டமைப்புக்களை அங்கு நிலைநிறுத்தவுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ஜேர்மனியில் அமெரிக்க இராணுவத்தளம் ஒன்றை நிலையாக வைத்திருக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதன்போது தெரிவித்துள்ளார்.

Sharing is caring!