போலி பாஸ்போர்ட் கும்பல் தெரிவித்த அதிர்ச்சி தகவல்

சென்னை:
அதிர்ச்சி… அதிர்ச்சி… பிடிப்பட்ட போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலிடம் இருந்து வெளியான தகவல் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.

சமீபத்தில் போலி பாஸ்போர்ட் தயாரித்து வந்த 11 பேர் கொண்ட கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர், தயாரிப்பு நிறுவனங்கள் சிலவற்றிற்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.

போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயற்சிக்கும் நபர்களை பிடித்து விசாரித்த போது, அவர்களுக்கு ஒரு கும்பல் போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கும்பலைப் பிடிக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் சிறப்பு குழு அமைக்கப்பட்டு, ஒரு மாதம் தீவிரமாக தேடி வந்தனர்.

கடந்த வாரம் போலி பாஸ்போர்ட் கும்பல் சென்னையில் கைது செய்யப்பட்டது. இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறுகையில், வெளிநாட்டு படப்பிடிப்புக்காக சினிமா தொழிலாளர்களை போலி பாஸ்போர்ட் மூலம் அனுப்பி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. அதிகாரிகளும் பணத்தை பெற்றுக் கொண்டு 800 போலி பாஸ்போர்ட்கள் தயாரித்து கொடுத்துள்ளனர்.

இறந்தவர், விமானத்தில் அடிக்கடி செல்லும் பயணிகளின் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!