போலி பெண் உளவாளி கைது

ரஷ்யாவை சேர்ந்தவர் மரியா புட்டினா (வயது 29). அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். இவர் ரஷ்யாவின் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமைகளுக்காக போராடும் அமைப்பின் நிறுவனர். இந்நிலையில், வாஷிங்டன் மற்றும் நியூயார்க் நகரில் அமெரிக்க அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுக்கு மிகப்பெரிய விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார்.

இதன் மூலம் மெல்லமெல்ல பிரபலமடைந்த மரியா, தன்னை ரஷ்யாவின் உளவாளியாக சிலரிடம் அறிமுகம் செய்துகொண்டார். பிரபலங்களுடன் இருக்கும் புகைப்படங்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட மரியா, அமெரிக்காவின் வெளிநாட்ட சொத்துகள் கட்டுப்பாட்டு துறையால் தடைவிதிக்கப்பட்ட அலெக்ஸான்டர் டோர்ஷின் என்பவருடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார்.

ரஷ்யா மத்திய வங்கியின் துணைத் தலைவரான அலெக்ஸான்டர் டோர்ஷின் ஆலோசனைப்படியும், அவரது திட்டப்படி அதிகாரத்தில் உள்ள சிலரை வளைத்துப்போட்டு அமெரிக்க அரசின் தேசிய முடிவுகளில் தலையீடு செய்யவும், குறிப்பாக, அமெரிக்க அரசின் துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டத்தை தளர்த்தவும் மரியா புட்டினா முயன்று வந்துள்ளார். இதையடுத்து அமெரிக்க உளவுப் படையினர் அவரை கைது செய்தனர்.

Sharing is caring!