போலீசார் நடத்திய வாகனச் சோதனையில் ரூ.3.50 கோடி சிக்கியது

ஐதராபாத்:
தெலுங்கானாவில் போலீசார் நடத்திய வாகனச் சோதனையில் ரூ.3.50 கோடி சிக்கியுள்ளது.

தெலுங்கானா சட்டசபை தேர்தல், இன்று நடக்கிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு வாராங்கல் மாவட்டத்தில், போலீசார் நடத்திய சோதனையின் போது, வேன் ஒன்றில், 3.50 கோடி ரூபாய் சிக்கியது. வேனில் இருந்த நபரை, போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!