போலீசார் யோகா செய்து மனதை நிலைப்படுத்த அட்வைஸ்

சென்னை:
ஒரு மனதாக வைத்துக் கொள்ள வேண்டும்… போலீசார் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்து மனதை ஒரு மனதாக வைத்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

போலீசார் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்து மனதை ஒரு மனதாக வைத்து கொள்ள வேண்டும். நாம் சாதனை படைக்கவே பிறந்துள்ளோம். அதற்கான திறமை நம்மிடம் உள்ளது. பற்களுக்கு இடையே இருக்கும் நாக்கு சாதுர்யமாக செயல்படுவது போல், போலீசார் செயல்பட வேண்டும்.

உலகின் சிறந்த ஸ்காட்லாந்து போலீசாருக்கு இணையாக தமிழக போலீசார் செயல்படுகின்றனர். இயற்கை பேரிடர்களின் போது தீயணைப்பு மற்றம் மீட்பு படையினர் சீரிய முறையில் பணியாற்றுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!