ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 7 வரை கைது செய்ய முடியாது!

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 7ம் தேதி வரை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீன் கேட்டு முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் இன்று மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை வரும் ஆகஸ்ட் 7ம் தேதி வரை கைது செய்ய தடைவிதித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

முன்னதாக கடந்த வெள்ளியன்று இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ புதிதாக குற்றப்பத்திரிகை ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் ப.சிதம்பரத்தின் பெயரும்  சேர்க்கப்பட்டு இருந்தது. இந்த குற்றப்பத்திரிகையை வரும் 31ம் தேதி நீதிபதி ஓ.பி.சைனி ஆய்வு செய்ய உள்ளார்.

எனவே ஆய்விற்கு பின் சிதம்பரம் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது. எனவே தன்னை கைது செய்ய தடைவிதிக்க கோரியும், முன்ஜாமின் கேட்டும் ப.சிதம்பரம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Sharing is caring!