மகன், மகளுடன் சிறையில் கேக் வெட்டி கொண்டாடிய நவாஸ்

பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை சிறையில் இருந்தபடியே அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அவரது மகள், மருமகன் மற்றும் சக கைதிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

பாகிஸ்தான் முஸ்லிம் நவாஸ் லீக் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப், மகள் மரியம், மருமகனும் முன்னாள் கேப்டனுமான முகமது சப்தார் (54) மற்றும் ஷெரீப்பின் 2 மகன்கள் ஹாசன், உசைன் ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்குகளில் கீழ் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து லண்டனில் சொகுசு பங்களா உள்ளிட்ட சொத்துகளை குவித்ததாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், மரியமுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், முகமது சப்தாருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் அடியாலா சிறையில் பலத்த பாதுகாப்புடன் தனது குடும்பத்தினருடன் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார் நவாஸ். இந்தநிலையில், பாகிஸ்தான் சுதந்திர தினத்தை நவாஸ் ஷெரீப் கடந்த 14-ம் தேதி சிறைச்சாலையில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். கேக் வெட்டும் போது மகள் மரியம், மருமகன் முகமது சப்தார் ஆகியோர் உடனிருக்க அனுமதி வ்ழங்கப்பட்டுள்ளது.

இதற்காக 3 கேக்குகள் வெளியிலிருந்து வரவழைக்கப்பட்டன. அவற்றை வெட்டிய ஷெரீப், குடும்பத்தினர் மற்றும் சக கைதியினருக்கு வழங்கி சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார். கேக் வெட்டிய பிறகு நவாஸ் ஷெரீப் சிறை கைதிகளுக்கு இடையே சில நிமிடங்கள் உரையாற்றியதாக பாகிஸ்தான் சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!