மக்களவை தேர்தல்…..காத்திருக்கும் காங்கிரஸ் கட்சி

மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பணிக்குழுவை அறிவித்துள்ளார்.

2019ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி படுசுறுசுறுப்பாக தயாராகி வருகிறது. நடக்கும் மக்களவை தேர்தலில் எதிர்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, பாஜக கட்சியை தோற்கடிக்கும் முயற்சியில் காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் மக்களவை தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் அதற்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத் அடங்கிய 9 பேர் கொண்ட குழுவை இன்று அறிவித்தார். மேலும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயார் செய்ய சசிதரூர், சல்மான் குர்ஷீத் அடங்கிய 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட விளம்பர பணிகளை மேற்கொள்ள 13 பேர் கொண்ட குழுவையும் காங்கிரஸ் அமைத்துள்ளது.

Sharing is caring!