மக்களை பாதிப்புக்குள்ளாகிய பாஜவை வெளியேற்ற ஒற்றுமை… காங்., தலைவர் பெருமிதம்

புதுடில்லி:
எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இணைந்து, மக்களை பெரும் பாதிப்பிற்குள்ளாக்கிய பா.ஜ., கட்சியை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்றியுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

5 மாநில தேர்தல் முடிவுகள் மாற்றத்திற்கான நேரம் இதுவே என்றும், காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

டில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசியதாவது:

5 மாநில தேர்தல்களின் வெற்றியை, இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் வெற்றியாகவே காங்கிரஸ் கட்சி பார்க்கிறது. இந்த வெற்றியின் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பொறுப்பை, அம்மாநில மக்கள் அளித்துள்ளனர். இத்தேர்தலில் திறம்பட பணியாற்றிய கட்சி தொண்டர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த தேர்தல் முடிவுகள், பிரதமர் மோடிக்கும், அக்கட்சிக்கும் தெளிவான கருத்தை எடுத்துரைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற மாநிலங்களின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைளை மேற்கொள்வோம்.

காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் ஒத்த கருத்து கொண்டவையாக உள்ளன. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இணைந்து, மக்களை பெரும் பாதிப்பிற்குள்ளாக்கிய பா.ஜ., கட்சியை, ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்றியுள்ளதாக ராகுல் கூறினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!