மக்கள் பனியை உருக வைத்து குடிநீராக பயன் படுத்துகின்றனர்

உலகின் மிகக் குளிர்ந்த பகுதியான சைபீரியாவில் மக்கள் பனியை உருக வைத்து குடிநீராக பயன் படுத்துகின்றனர்

சைபீரியாவின் யகுதியா என்னும் பகுதி உலகில் மிகக் குளிர்ந்த பகுதியாகும். இது சைபீரியாவில் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. பனி படர்ந்த இந்தப் பகுதியில் கிணறுகள் ஆறுகள் என எதுவும் கிடையாது. எந்த ஒரு பயிரும் வளராது. இங்குள்ள ஒரே நீர் நிலை பனிக்கட்டி ஆகி உள்ளது.

அத்துடன் வீடுகளில் உள்ள குழாய்களில் உள்ள நீரும் பனியாக உறைந்து விடுகிறது. நவம்பர் மாதத்தில் இங்குள்ள மக்கள் பனிக்கட்டிகளை உடைத்து பூமிக்கடியில் சேமித்து வைத்துக் கொள்கின்றனர். இந்த பகுதி அதன் பிறகு சிறிது சிறிதாக உஷ்ணம் அடைகிறது. அப்போது இந்த சேமிக்கப்பட்ட பனிக்கட்டிகள் உருகி நீர் ஆகிறது.

இந்தப் பகுதி மக்கள் இவ்வாறு உருகும் நீர் மிகவும் குளிர்ந்த நீராக உள்ள போதிலும் மிகவும் சுத்தமான நீர் என்பதால் இதை குடி நீராக பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில் இந்த நீரை மடும் பருகுவதால் பல தாது குறைபாடுகள் எற்பட வாய்ப்பு உண்டு என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Sharing is caring!