மக்கள் 2019 ஆம் ஆண்டுப்பிறப்பை குதூகலமாக கொண்டாடிய நியூசிலாந்து

2019 புத்தாண்டை சமோவா மற்றும் கிரிபடி ஆகிய நாடுகள் முதன்முதலாக வரவேற்றுள்ளன.

அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து மக்கள் 2019 ஆம் ஆண்டுப்பிறப்பை குதூகலமாக கொண்டாடியுள்ளனர்.

புத்தாண்டுப்பிறப்பினை முன்னிட்டு மிகப்பெரியளவிலான வாணவேடிக்கைகள் காண்பிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

புத்தாண்டை வரவேற்பதற்காகவும், வாணவேடிக்கைகளைக் காண்பதற்காகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு குழுமியிருந்தனர்.

நியூஸிலாந்தின் ஒக்லண்டில் பெருமளவானோர் கூடி புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.

இதனிடையே இலங்கை நேரப்படி மாலை 6.30க்கு அவுஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறக்கவுள்ளது.

புத்தாண்டை வரவேற்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் சிட்னி நகரில் வான வேடிக்கை ஆயத்தங்களுடன் காத்துள்ள நிலையிலும் கரையோரப்பகுதிகளில் புயல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!