மசகு எண்ணெயின் விலை கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு சடுதியாக வீழ்ச்சி

சர்வதேச சந்தைகளில் மசகு எண்ணெயின் விலை கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அடுத்த ஆண்டு முதல் ஒரு நாளுக்கான எண்ணெய் ஏற்றுமதியின் அளவைக் குறைக்கவுள்ளதாக எண்ணெய் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு அறிவித்த போதிலும், சர்வதேச அளவில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

ஒரு நாளுக்கான எண்ணெயின் ஏற்றுமதி அளவு அடுத்த வருடத்திலிருந்து 1.29 மில்லியன் பீப்பாய்களாக இருக்கும் என அந்தக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது சாதாரண ஏற்றுமதியை விட 70,000 பீப்பாய்கள் குறைவு என அந்தக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Sharing is caring!