மசகு எண்ணெயின் விலை தொடர்ந்து வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துள்ளது.

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை 5 வீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, பிரித்தானியாவின் பிரென்டி சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 76.37 டொலராக பதிவாகியிருந்தது.

அமெரிக்க சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 66.31 லொடருக்கு விற்கப்படுகின்றது.

கடந்த வாரத்தில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சி கண்டுள்ளதாக சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானுக்கு அமெரிக்கா விடுத்த தடை காரணமாக உலக சந்தையில் ஏற்பட்டுள்ள மசகு எண்ணெய் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சவுதி ஏற்கனவே கூறியுள்ளமை இதற்கு காரணமாகும்.

அமெரிக்கா ஈரானுக்கு எதிராக விதித்த தடை உத்தரவு அடுத்த மாதத்திலிருந்து அமல்படுத்தப்படவுள்ளது.

Sharing is caring!