மசகு எண்ணையின் விலை சற்று அதிகரித்துள்ளது

உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகரித்துள்ளது.

உலக சந்தைக்கு விநியோகிக்கபடுகின்ற எண்ணெய் கொள்கலன்களின் தொகையைக் கட்டுப்படுத்துவதற்கு ஒபெக் அமைப்பிலுள்ள நாடுகள் தீர்மானித்துள்ளமையே இந்த மசகு எண்ணெய் விலை அதிகரிப்பிற்கு காரணமாகும்.

இதன்படி, பிரித்தானிய ப்ரென்ட் சந்தையில் ஒரு கொள்கலன் மசகு எண்ணையின் விலை 67.29 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.

இதேவேளை, அமெரிக்க சந்தையில் ஒரு கொள்கலன் மசகு எண்ணெயின் விலை 57 தசம் 7 சதம் அமெரிக்க டொலர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!