மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி:
அரசு மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தார்.

இதனையடுத்து, அங்கு சிகிச்சை பெற்ற நோயாளிகள் பீதியுடன் வெளியேறினர். தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு வந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில், மிரட்டல் புரளி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!