மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி

புதுடில்லி:
அனுமதி… அனுமதி… மதுரையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

மதுரை அருகே தோப்பூரில் ரூ.1264 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒப்புதல் அளித்த பிரதமர் மோடி, மற்றும் மத்திய அமைச்சர் ஜெ.பி. நெட்டா, பொன். ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் பழனிசாமி ஆகியோருக்கு  எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசு ஒப்புதலை தொடர்ந்து விரைவில் அதற்கான நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் பணி நிறைவடையும், 100 எம்.பி.பி.எஸ். இடங்களும், 60 பி.எஸ்.சி. நர்சிங் இடங்களும் சேர்க்கப்படும். 15 முதல் 20 நவீன சிகிச்சை பிரிவுகள் அமையும். தினமும் 1500 நோயாளிகள் சிகிச்சை பெறுவர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!