மதுரையில் பாஜ நிர்வாகி கார் எரிப்பு… பரபரப்பு

மதுரை:
மதுரையில் பாஜ நிர்வாகியின் கார் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெப்பக்குளம் பங்கஜம் காலனியை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் பா.ஜ., மகளிரணி செயலாளர்.

இவர் தன் காரை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். இந்நிலையில் இந்த கார் எரிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!