மது போதையில் உயிருள்ள பாம்பை விழுங்கியவர் மரணம்: வைரலான வீடியோ

மது போதையில் உயிருள்ள பாம்பை விழுங்கிய நபர் அடுத்த 4 மணி நேரத்தில் உயிரிழந்தார். அவர் பாம்பை விழுங்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் அம்ரோ மாவட்டத்தைச் சேர்ந்தவர் மஹிபால் சிங் (40), கூலித் தொழிலாளி.

இவர் மது போதையில் உயிருள்ள பாம்பை விழுங்கியதால் மரணமடைந்தார்.

மது போதையில் இருந்த மஹிபால் சிங், சாலையில் கிடந்த சிறு பாம்பை கையில் எடுத்து வித்தை காட்டியுள்ளார். அப்போது அருகில் இருந்தவர்களின் தூண்டுதலின் பேரில் அந்தப் பாம்பை உயிருடன் விழுங்கியுள்ளார். பின்னர் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இருப்பினும் அந்தப் பாம்பு வெளியே வரவில்லை.

இதனால் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஹிபால், அடுத்த 4 மணிநேரத்தில் விஷத்தின் தாக்கத்தால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்குப் பதிவு செய்து, தூண்டியவர்கள் குறித்து விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மஹிபாலுக்கு மனைவி, மகன், 3 மகள்கள் உள்ளனர்.

Sharing is caring!