மத்தியஸ்தம்… வெற்றி பெறாது… இந்தியா காட்டம்

புதுடில்லி:
வெற்றி பெறாதுங்க… தப்பு கணக்காகியிடும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. எதற்காக தெரியுங்களா?

மத்தியஸ்தம் என்ற பெயரில், காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தான் புதிய அரசு மீண்டும் இழுத்தால் அது வெற்றி பெறாது என இந்தியா கூறியுள்ளது. காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண ஐ.நா., பாதுகாப்பு சபை முயற்சி செய்ய வேண்டும் என பாகிஸ்தான் தூதர் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், ஐ.நா.,வில், இந்தியாவிற்கான தூதர் சையத் அக்பரூதீன் பேசியதாவது:

பாகிஸ்தானில் அமைந்துள்ள புதிய அரசு, மத்தியஸ்தம் என்ற பெயரில், காஷ்மீர் பிரச்னையை மீண்டும் எழுப்பினால், அது வெற்றி பெறாது. எதிர்வாதங்கள் செய்வதை விட்டுவிட்டு, தெற்கு ஆசிய பகுதியை பாதுகாப்பான, ஸ்திரமான, வளர்ச்சி பெற்ற பகுதியாக, மாற்ற ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். தனிமைபடுத்தப்பட்ட ஒரு குழுவானது, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி குறித்து தேவையில்லாமல் விவாதத்தை எழுப்புகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!