மத்திய அமைச்சருக்கு அமெரிக்க பல்கலை., விருது

நியூயார்க்:
விருது… அமெரிக்கா பல்கலை.,யின் உயர்ந்த விருது மத்திய அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ரயில்வே மற்றும் நிலக்கரி துறை அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான, பியுஷ் கோயலுக்கு, அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலை, உயர் எரிசக்தி கொள்கை விருது வழங்கி, கவுரவித்துள்ளது.

தன் பதவிக்காலத்தில், 18 ஆயிரம் தொலை துார கிராமங்களில் துரித மின் இணைப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கம் செய்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!