மத்திய அமைச்சரை சந்தித்த முதல்வர்… தமிழக பணிகள் குறித்து ஆலோசனை

சென்னை:
சந்தித்தார்… மத்திய அமைச்சரை சந்தித்தார் முதல்வர் பழனிச்சாமி.

சென்னை வந்துள்ள மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார்.

அப்போது தமிழகத்தில் நடைபெறும் உயர்மட்ட மேம்பாலம், சாலைப்பணிகள் போன்றவை குறித்தும், சாலைத்திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி மற்றும் தற்போது பணிகளின் நிலை.
சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சந்திப்பின் போது உடன் இருந்த தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இந்த சந்திப்பில் அரசியல்ரீதியாக எதுவம் பேசப்படவில்லை என்று தெரிவித்தார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!