மத்திய அமைச்சர் பேச்சு… கிண்டல் செய்து டுவிட் போட்ட காங்., தலைவர்

புதுடில்லி:
மத்திய அமைச்சரின் பேச்சை கிண்டல் செய்து காங்., தலைவர் டுவிட் போட்டுள்ளார்.

சமீபத்தில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, இடஒதுக்கீடு வழங்கலாம். ஆனால் வேலைவாய்ப்பு எங்கே இருக்கிறது? இடஒதுக்கீடு வழங்கினால் மட்டும் வேலை கிடைத்து விடும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை என்றார்.

கட்காரியின் இந்த பேச்சை காங்., தலைவர் ராகுல் கிண்டல் அடித்து உள்ளார். கட்காரியின் இடஒதுக்கீட்டு பேச்சு தொடர்பான ஆங்கில செய்தி நிறுவனத்தின் செய்தியை மேற்கோள் காட்டி, டுவிட்டரில் ராகுல் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், அருமையான கேள்வி கட்காரி அவர்களே. ஒவ்வொரு இந்தியனும் இதே கேள்வியை தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!