மத்திய அமைச்சர் மீதான மனு தள்ளுபடி… கோர்ட் உத்தரவு

புதுடில்லி:
தள்ளுபடி… தள்ளுபடி… நிதி அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதி விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி எம்எல் ஷர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் எஸ்கே கவுல் தலைமையிலான அமர்வு, இந்த மனுவை விசாரிக்க எந்த காரணமும் இல்லை எனக்கூறி தள்ளுபடி செய்தது. மேலும் வக்கீல் ஷர்மாவுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை அவர் கட்டாத வரை, ஷர்மா தாக்கல் செய்யும் எந்த மனுவையும் பதிவு செய்யக்கூடாது என பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!