மத்திய அரசுதான் விசாரிக்க அனுமதி வழங்கியது… கோர்ட்டில் சிபிஐ தகவல்

புதுடில்லி:
மாஜி நிதியமைச்சர் சிதம்பரத்திடம் விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது என்று சிபிஐ கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில், காங்கிரசை சேர்ந்த, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்திடம் விசாரணை நடத்த, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக, சி.பி.ஐ., சார்பில், டில்லி கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்செல் – மேக்சிஸ் நிறுவனங்களிடையிலான ஒப்பந்தத்தில், அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரிய அனுமதி வழங்கியதில், முறைகேடு நடந்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்தது.காங்கிரசை சேர்ந்த, மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, அவரது அமைச்சரவையில், நிதியமைச்சராக இருந்த சிதம்பரம், இந்த முறைகேட்டுக்கு துணை போனதாக, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக, சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீதும், அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ‘இந்த வழக்கு தொடர்பாக, சிதம்பரம் மற்றும் கார்த்தியிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரிக்கலாம்’ என, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக, டில்லி கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், டிச., 18 வரை, இருவரையும் கைது செய்ய, கோர்ட் தடை விதித்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!