மத்திய அரசு பேச்சுவார்த்தை… அன்னாஹசாரே உண்ணாவிரதம் ஒத்திவைப்பு

ரலேகான் சித்தி:
மத்திய அரசின் பேச்சு வார்த்தையை அடுத்து உண்ணாவிரதத்தை ஒத்தி வைத்துள்ளார் அன்னாஹசாரே.

லோக்பால், லோக்ஆயுக்தாவை அமைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே காந்தி ஜெயந்தியான நேற்று மஹாராஷ்டிரா மாநிலம் ரலேகான் சித்தியில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்து இருந்தார்.

இதையடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதியாக மராட்டிய அமைச்சர் கிரிஷ் மகாஜன், அன்னா ஹசாரேவை சந்தித்து பேசியதையடுத்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை அன்னா ஹசாரே ஒத்திவைத்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இனியும் மத்திய அரசு தாமதம் செய்தால் காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ம் தேதி எனது போராட்டத்தை தீவிரப்படுத்துவேன்[‘ என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!