மத்திய பிரதேசம், மிசோரம் சட்டசபை தேர்தல் இன்று தொடங்குகிறது

புதுடில்லி:
இன்று நடக்கிறது… நடக்கிறது… மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில், சட்டசபை தேர்தல்.

மத்திய பிரதேச மாநிலத்தில் 230 சட்டசபை தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் களத்தில், ஆளும், பா.ஜ., – எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மொத்தமுள்ள, 230 தொகுதிகளில், 2,907 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில், 5.04 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். மொத்தம், 65 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வட கிழக்கு மாநிலமான, மிசோரமில், முதல்வர் லால் தன்ஹாவ்லா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின், 40 சட்டசபை தொகுதிகளுக்கும், இன்று ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இங்கு, 209 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில், 7.70 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். வட கிழக்கு மாநிலங்களிலேயே, மிசோரமில் மட்டுமே ஆட்சியில் உள்ளதால், ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில், காங்கிரஸ் களமிறங்கி உள்ளது.

இந்த இரண்டு மாநிலங்களிலும் காலை, 8:00 முதல், மாலை, 5:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. இரண்டு மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவாகும் ஓட்டுகள், டிச., 11ல் எண்ணப்படும்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!