மத்திய பிரதேஷ் மாநில முதல்வராக கமல் நாத் பதவி​யேற்பு

இந்தியாவின் மத்திய பிரதேஷ் மாநில முதல்வராக காங்கிரஸ் கட்சியின் கமல் நாத் இன்று பதவியேற்கவுள்ளார்.

பதவியேற்பு நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட ஆதரவளிக்கும் கட்சி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

மத்திய பிரதேஷில் நடத்தப்பட்ட சட்டசபை தேர்தலில், 15 வருடங்களாக ஆட்சியதிகாரத்தை தக்க வைத்திருந்த பாரதீய ஜனதா கட்சியை தோற்கடித்து, காங்கிரஸின் கமல் நாத் வெற்றி பெற்றார்.

இதனிடையே, தமது அமைச்சரவையில் புதிதாக இரண்டு சட்டத்தரணிகளை உள்ளடக்கவுள்ளதாக மத்திய பிரதேஷ் மாநில முதல்வர் கமல் நாத் கூறியுள்ளார்

Sharing is caring!