மத உணர்வுகளை காயப்படுத்தியதாக வழக்கு… கைதானார் ரஹானா

எர்ணாகுளம்:
மத உணர்வுகளை காயப்படுத்தினார் என்ற புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ரஹானாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

சபரிமலை செல்ல முயன்று சர்ச்சையை ஏற்படுத்திய ரஹானா பாத்திமாவை மத உணர்வுகளை காயப்படுத்திய புகாரின் பேரின் போலீசார் கைது செய்தனர்.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த அக்., 18ல், கேரளாவை சேர்ந்த ரஹானா பாத்திமா (29) அதிரடிப்படை சீருடை, ஹெல்மெட் அணிந்தும் செல்ல முயன்றார். ஆனால் பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவரால் கோயிலுக்குள் நுழைய முடியவில்லை.

இந்நிலையில் கடந்த அக்.,20ம் தேதி ரஹானா பாத்திமா தனது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில், கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த கருத்து மத உணர்வுகளை காயப்படுத்துவதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், ஐபிசி 295 ஏ சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் முன்ஜாமீன் கேட்டு, உள்ளூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால், முன்ஜாமீன் வழங்க மறுத்ததுடன், நடவடிக்கை எடுக்கவும் அனுமதி வழங்கியது.

இதையடுத்து அவரை பத்தினம்திட்டா போலீசார் கைது செய்தனர். விரைவில் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!