மனித இனத்திற்கு சிரியாவை விட பாகிஸ்தானால் 3 மடங்கு பயங்கரவாத அச்சுறுத்தல்

லண்டன்:
அதிர்ச்சி தரும் ஆய்வு ஒன்றின் முடிவு வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?

மனித இனத்திற்கு, சிரியாவை விட பாகிஸ்தானால் 3 மடங்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டு உள்ளது. மனித இனத்திற்கான அச்சுறுத்தல் மற்றும் சர்வதே பயங்கரவாதம் என்ற தலைப்பில் ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் பிராந்திய போர்சைட் குழு ஆய்வு நடத்தி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

லஷ்கர் இ தொய்பா மற்றும் ஆப்கன் தலிபான் பயங்கரவாத அமைப்புகள், சர்வதேச பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. பயங்கரவாதிகளுக்கு புகலிடம் மற்றும் அதிக பயங்கரவாத குழுக்கள் செயல்படும் நாடுகளில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது.

கடினமான உண்மைகள் மற்றும் புள்ளியில் அடிப்படையில், மிகவும் அபாயமான பயங்கரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் உதவுவது தெரிய வந்துள்ளது. அனைத்து வகையிலும் மோசமான பிரிவினைவாத அமைப்புகளின் எழுச்சி, பேரழிவுக்காக ஆயுதங்களை தவறாக பயன்படுத்துதல், பொருளாதாரத்திற்கு இடையூறு ஆகியவற்றை இக்குழுக்கள் செய்கின்றன.

இதில் 21ம் நூற்றாண்டில் பயங்கவாத செயல்களில் ஈடுபட்ட 200 குழுக்கள் குறித்து ஆராயப்பட்டது. அதில், 200 குழுக்களில் நான்கு பங்கு குழுக்கள் மட்டுமே, சொந்த கொள்கைகளால் உருவாக்கப்பட்டன. இவற்றில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மட்டுமே, கடந்த 5 ஆண்டுகளில் மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தது.

அல்கொய்தா 2011 வரை ஒசாமா பின்லாடன் தலைமையில் செயல்பட்டது. தற்போது அவரது மகன் ஹஸ்மா பின் ஒசாமா பின்லாடன் தலைமையில் செயல்படுகிறது. அல்கொய்தா பாகிஸ்தானில் பிறந்தது. இதன்மூலம் ஆப்கனில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தியது. அபோதாபாத்தில் பெரிய காம்பவுண்ட் வீட்டில் ஒசாமா வசித்தார்.

இந்த வீடானது, அந்நாட்டின் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வீட்டை விட பெரியது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!