மன்னித்துக் கொள்ளுங்கள்… சரத்யாதவ் உருக்கம்

புதுடில்லி:
மன்னித்துக் கொள்ளுங்கள்… என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் சரத்யாதவ். எதற்காக தெரியுங்களா?

மதச்சார்பற்ற முன்னாள் மூத்த தலைவரும் லோக்தந்திரிக் ஜனதா தளம் தலைவருமான சரத் யாதவ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்த்ரா ராஜே குண்டாக இருப்பதாக கிண்டலடித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வசுந்த்ராவும் கடுமையாக அறிக்கை வெளியிட்டார். இது குறித்து சரத் யாதவ் கூறியது, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவின் அறிக்கையை பார்த்தேன். எனக்கு, அவருடன் நீண்ட காலமாக குடும்ப உறவு உள்ளது. நான் கூறியது அவரை காயப்படுத்தி இருந்தால், அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது குறித்து அவருக்கு கடிதம் எழுத உள்ளேன் என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!