“மரணம் ஒருநாள் என்னை சூழும் அதை நான் ஏற்பேன்”

“மரணம் ஒருநாள் என்னை சூழும் அதை நான் ஏற்பேன்.. ஆனால் நான் இருக்கும் வரை இந்த சமூகம் ஆதிக்க வெறியினாலும் மத வெறியினாலும் தினம் தினம் செத்து மடிவதை எதிர்ப்பேன். ஏனென்றால் நான் பெரியாரின் வளர்ப்பு, அண்ணாவின் கொள்கைப் பாதுகாவலன்…

நீங்கள் ஒருமுறை இறப்பிற்காக பயப்படுபவர்கள். ஆனால் நானோ அதிக முறை கொல்லப்பட்டவன். சூழ்ச்சிகளாலும் நயவஞ்சகத்தாலும் என் உடல் மட்டுமே மரணத்தை காணவில்லை, ஆனால் எனது உயிர் பல முறை மரணித்து உயர்ப்பித்துள்ளது!!!

எனக்கு மலர் வளையம் வைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் பலருக்கும் நான் இரங்கற்பா எழுதிய போதும் அதை எனக்கும் உரியதாகவே நினைத்து எழுதியவன்.,

அஞ்சிடேன் நான் மரணத்தை கண்டு.. அந்த மரணத்திடம் போய் சொல்.. என்னை கண்டு அஞ்ச வேண்டாம் என்று.. ஏனென்றால் நான் அந்த மரணத்தையே வென்றவன்…!!!

Sharing is caring!