மரண தண்டனை விதிக்கப்பட்ட போதைப்பொருள் வர்த்தகர்களில் பாகிஸ்தான் பிரஜைகள் நால்வர் உள்ளடக்கம்
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர்களில் பாகிஸ்தான் பிரஜைகள் நால்வர் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பாகிஸ்தான் பிரஜைகள் உள்ளிட்ட 18 மரண தண்டனை கைதிகளின் பெயர் விபரங்கள் கடந்த வௌ்ளிக்கிழமை நீதியமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
போதைப்பொருள் விவகாரம் தொடர்பில் மரண தண்டனை விதிகக்கப்பட்டு, தண்டனையை அனுபவித்து வரும் நிலையில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டுள்ள
சிறைக்கைதிகள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவுக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அலுக்கோசு பதவிக்காக அடுத்த வாரம் முதல் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.